ADDED : அக் 14, 2024 05:18 AM
கரூர்: கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில், நேற்று விடிய, விடிய இடியுடன் கூடிய கன மழை பெய்தது. வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில், அடுத்தடுத்து உருவாகும் வளி மண்-டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.
கரூர் மாவட்டத்தில், நேற்று முன்தினம் இரவு, பல பகுதிகளில் தொடங்கிய மழை, நேற்று அதிகாலை வரை நீடித்தது. மேலும், நேற்று காலை முதல் கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விட்டு, விட்டு மழை பெய்தது. அதிகபட்சமாக மாயனுாரில், 72 மி.மீ., மழை பெய்தது. நேற்று காலையிலும், மாயனுாரில் மழை நீடித்தது. அமராவதி அணை நிலவரம்
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 1,124 கன அடி தண்ணீர் வந்தது. மழை காரணமாக அமராவதி ஆறு மற்றும் புதிய பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்-தப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 79.86 அடியாக இருந்தது.
ஆத்துப்பாளையம் அணை நிலவரம்
கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 3 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 16.72 அடியாக இருந்தது. அணைப்பகு-தியில், 47.2 மி.மீ., மழை
பெய்தது.