ADDED : டிச 05, 2024 07:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த வயலுார் பஞ்சப்பட்டி, சிவாயம், பாப்-பகாப்பட்டி, பழையஜெயங்கொண்டம், லட்சுமணம்பட்டி, சின்ன சேங்கல், சரவணபுரம், குழந்தைப்பட்டி, வடுகப் பட்டி ஆகிய இடங்களில், நேற்று முன்தினம் மாலை, 5:30 மணிக்கு துவங்கிய மழை, இரவு இடி மின்னலுடன்
கனமழை பெய்தது. இதனால், வயலுார், நடுப்பட்டி, பாம்பான்பட்டி, கோடாங்கிப்பட்டி, பாப்பகாப்பட்டி
பகுதிகளில் உள்ள மழைநீர் சேமிப்பு குளம் நிரம்பின. இதன் மூலம் இப்பகுதியில் கிணறு-களில் நீர் மட்டம்
உயர்ந்தது.