/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிருஷ்ணராயபுரத்தில் காற்றுடன் கனமழை; ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சேதம்

ADDED : மே 08, 2024 05:27 AM
கிருஷ்ணராயபுரம் : கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், காற்றுடன் கூடிய மழையால் வாழை மரங்கள் பல இடங்களில் உடைந்து விழுந்ததால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருக்காம்புலியூர், பிச்சம்பட்டி, மகாதானபுரம், பொய்கைப்புத்துார், சிந்தலவாடி, பிள்ளபாளையம் ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. இதனால் பல இடங்களில் வாழை மரங்கள் முறிந்து கீழே சாய்ந்து கிடந்தது. அறுவடை செய்வதற்கு முன்பு, காற்றினால் சேதம் ஏற்பட்டதால் விவசாயிகள் பாதிப்பு அடைந்துள்ளனர்.
விவசாயிகள் கடன் வாங்கி வாழை சாகுபடி செய்திருந்தனர். இந்த பகுதியில் பரவலாக, 10 ஆயிரம் வாழை மரங்கள் காற்று, மழையால் பாதிப்பு அடைந்துள்ளது. வாழை சேதத்தை, தோட்டக்கலைத்துறை நிர்வாகம் கணக்கீடு செய்து, அதற்கான நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.