/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கன மழையால் நெல், வாழை வயலில் மழைநீர் தேக்கம்: விவசாயிகள் கவலை
/
கன மழையால் நெல், வாழை வயலில் மழைநீர் தேக்கம்: விவசாயிகள் கவலை
கன மழையால் நெல், வாழை வயலில் மழைநீர் தேக்கம்: விவசாயிகள் கவலை
கன மழையால் நெல், வாழை வயலில் மழைநீர் தேக்கம்: விவசாயிகள் கவலை
ADDED : டிச 04, 2024 06:48 AM
குளித்தலை: குளித்தலை சுற்றுவட்டார பகுதி களில், நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. இங்கு பெய்த மழைநீர், கொடிங்கால் வடிகால் வாய்க்கால், சிவாயம் காட்டுவாரி வழியாக சென்று, மேட்டுமருதுார் கல்லுப்பாலத்தில் இணைகிறது.
இந்த பாலத்தில் உள்ள, 18 கண்மாயில், 3 கண்மாய்களில் மட்டும் தண்ணீர் வெளியேறுகிறது. அந்த கண்மாயிலும் செடி, கொடிகள் அடைத்துள்ளதால், தண்ணீர் வெளியேற முடியவில்லை. இதனால், கண்மாய் அருகில் உள்ள மருதுார், மேட்டுமருதுார், ராஜேந்திரம், தண்ணீர் பள்ளி, பரளி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து பயிர்கள் சேதமடைந்தன. நெற்பயிர்கள் முழுதும் நீரில் மூழ்கின. மேலும், வாழை தோட்டத்தில் அதிகளவு தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இப்பகுதி விவசாயிகள், கல்லுப்பாலத்தில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றக்கோரி, அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, வேதனையுடன் புகார் தெரிவித்தனர். இதுகுறித்த, எஸ்.டி.ஓ., கோபி கிருஷ்ணன் கூறுகையில், ''மேட்டுமருதுார் கொடிங்கால் வடிகால் வாய்க்கால், கல்லுப்பாலத்தில் தேங்கிய செடி கொடிகள் பொக்லைன் உதவியுடன் அகற்றப்படும்,'' என்றார்.