/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மாவட்டத்தில் சாரல் மழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
/
கரூர் மாவட்டத்தில் சாரல் மழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கரூர் மாவட்டத்தில் சாரல் மழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கரூர் மாவட்டத்தில் சாரல் மழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ADDED : டிச 02, 2025 02:09 AM
கரூர், கரூர் மாவட்டத்தில், பல்வேறு இடங்களில் நேற்று காலை வரை சாரல் மழை பெய்தது. குளிர் காரணமாக, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த பகுதி, வலு குறைந்து திசை மாறியது. இதனால், தமிழகம் முழுவதும், 13 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் நேற்று முன்தினம் அறிவித்திருந்தது.
கரூர் மாவட்டத்தில், நேற்று முன்தினம் பல்வேறு இடங்களில், கனமழை இல்லாத நிலையில், சாரல் மழை நேற்று அதிகாலை வரை விட்டு விட்டு நீடித்தது. இதனால், ஏற்பட்ட குளிர் காரணமாக நேற்று காமராஜர் தினசரி மார்க்கெட், கரூர், வெங்கமேடு, வேலாயுதம்பாளையம் உழவர் சந்தைகளுக்கு, பொதுமக்கள் குறைவாகவே வந்திருந்தனர்.கரூர் மாவட்டத்தில் நேற்று பள்ளி, கல்லுாரிகள் வழக்கம் போல் இயங்கின. பொதுவாக, தொடர் மழை காரணமாக ஏற்பட்ட குளிரால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை நேற்று பாதிக்கப்பட்டது.