/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பாலமுருகன் கோவிலில் கும்பாபிேஷக விழா
/
பாலமுருகன் கோவிலில் கும்பாபிேஷக விழா
ADDED : டிச 02, 2025 02:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம், பாலப்பட்டி கிராமத்தில், பாலமுருகன் கோவில் கும்பாபி ேஷக விழா நடந்தது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த பாலப்பட்டி கிராமத்தில் பாலமுருகன் கோவில் உள்ளது. இந்த கோவில் புதிதாக கட்டப்பட்டது.
கும்பாபி ேஷகத்தை முன்னிட்டு, வளாகத்தில் யாக சாலை அமைக்கப்பட்டு கணபதி பூஜை, வாஸ்து பூஜை நடந்தது. நேற்று காலை விநாயகர் வழிபாடு செய்து பாலமுருகனுக்கு கும்பாபிேஷகம் நடந்தது. பின்னர் தீபாராதனை காட்டப்பட்டது. பாலப்பட்டி சுற்று பகுதி மக்கள் கலந்து கொண்டனர். பின், அன்னதானம் வழங்கப்பட்டது.

