/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
காந்தி ஜெயந்தியன்று கறி கடைகள் திறப்பு சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகள் அதிருப்தி
/
காந்தி ஜெயந்தியன்று கறி கடைகள் திறப்பு சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகள் அதிருப்தி
காந்தி ஜெயந்தியன்று கறி கடைகள் திறப்பு சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகள் அதிருப்தி
காந்தி ஜெயந்தியன்று கறி கடைகள் திறப்பு சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகள் அதிருப்தி
ADDED : அக் 03, 2025 01:53 AM
ப.வேலுார், காந்தி ஜெயந்தியான நேற்று ப. வேலுாரில் வழக்கம்போல், கறி கடைகள் செயல்பட்டதால் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகள் அதிருப்தியடைந்தனர்.
நாமக்கல் மாவட்டம் ப.வேலுாரில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு டவுன் பஞ்., வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு, நாமக்கல் மாவட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் வாரிசுகள் நலச்சங்கம் சார்பாக, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் அவனாசிலிங்கம் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர் பழனிவேலு முன்னிலை வகித்தனர். நாமக்கல் மாவட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் வாரிசுகள் நல சங்கம் சார்பாக 156 வது, காந்தி பிறந்த நாளை முன்னிட்டு உலக அகிம்சை தினமாக அனுசரிக்க வேண்டும். நம் மனதில் அன்பு, சத்தியம், சகிப்புத்தன்மை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய நற்பண்புகளை பின்பற்றுவோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ப.வேலுார் நகர அனைத்து வர்த்தக சங்கம் சார்பாக தலைவர் சுந்தரம் கலந்து கொண்டார்.
ப.வேலுார் அனைத்து பகுதிகளிலும்,காந்தி ஜெயந்தியான நேற்றும் வழக்கம் போல் இறைச்சி கடைகள் செயல்பட்டன. இதனைக் கண்ட சுதந்திர போராட்ட வீரர்கள் வாரிசுகள் நல சங்க நிர்வாகிகள் அதிருப்தியடைந்தனர்.
சங்க மாவட்ட செயலாளர் அவனாசிலிங்கம் கூறியதாவது: காந்திஜி பிறந்தநாள் முன்னிட்டு உலக அகிம்சைத்தனமாக கொண்டாடி வருகின்றனர். அன்று ஆடு, கோழி, மாடுகளை இறைச்சிக்காக வெட்டுவதை அரசு தடை செய்துள்ளது. மேலும் அன்று இறைச்சிக் கடைகள் செயல்படவும், மதுபான விற்பனையும் அரசு தடை விதித்துள்ளது. ஆனால் ப.வேலுார் சுற்று வட்டார பகுதிகளில் காந்தி ஜெயந்தி அன்று வழக்கம் போல் அனைத்து இறைச்சி கடைகளும் செயல்பட்டன. அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை. வரும் காலங்களில் இது போன்று தடை உத்தரவுகளை நடைமுறைப்படுத்த, அதிகாரிகள் முன் வர வேண்டும். இவ்வாறு கூறினார்.