/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வெங்ககல்பட்டி ரவுண்டானாவில் ஹைமாஸ் விளக்குகள் தேவை
/
வெங்ககல்பட்டி ரவுண்டானாவில் ஹைமாஸ் விளக்குகள் தேவை
வெங்ககல்பட்டி ரவுண்டானாவில் ஹைமாஸ் விளக்குகள் தேவை
வெங்ககல்பட்டி ரவுண்டானாவில் ஹைமாஸ் விளக்குகள் தேவை
ADDED : அக் 17, 2025 02:07 AM
கரூர், தேசிய நெடுஞ்சாலைகளில் நடக்கும் விபத்துகளை தடுக்கும் வகையில், வெங்ககல்பட்டி பாலம் ரவுண்டானாவில், ஹைமாஸ் விளக்குகள் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கரூர் --- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், வெங்ககல்பட்டியில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இதன் வழியாக வெள்ளியணை, குஜிலியம்பாறை, திண்டுக்கல் உள்பட பல்வேறு ஊர்களுக்கு பஸ் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
மேம்பாலத்தின் கீழ் பகுதியில், இரண்டு பக்கமும் தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலைக்கு செல்ல வசதியாக ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில், இதுவரை போதிய மின்விளக்கு வசதி ஏற்படுத்தப்படவில்லை. சாலையில் வெளிச்சம் இல்லாமல் இரவு நேரங்களில் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. சாலையை கடக்கும் மக்கள் மீது, வேகமாக வரும் வாகனங்கள் மோதி விடுகின்றன. ரவுண்டானாவில் ஹைமாஸ் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.