ADDED : டிச 30, 2025 05:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், குளித்தலை, மாயனுார், தோகைமலை, பஞ்சப்பட்டி, நங்கவரம், திருச்சி மாவட்டம் முசிறி, தொட்டியம், கொளக்குடி, பெட்டவாய்த்தலை உள்ளிட்ட, 400க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பொதுமக்கள் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், மருத்துவமனை முன் வாயிலில் அமைக்கப்பட்டுள்ள உயர்மின் கோபுர விளக்கு, கடந்த சில நாட்களாக எரியாததால், அப்பகுதி இருளில் மூழ்கி உள்ளது. இதனால், மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, உயர்மின் கோபுர விளக்கை சரி செய்து, மீண்டும் ஒளிர செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

