/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குருநாதன் கோவில் அருகே கழிவுநீரால் அவதி
/
குருநாதன் கோவில் அருகே கழிவுநீரால் அவதி
ADDED : டிச 30, 2025 05:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்.,க்குட்பட்ட குருநாதன் கோவில் சாலை, பிச்சம்பட்டி, கோவக்குளம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பிரதான நெடுஞ்சாலையாக உள்ளது. இந்த சாலையை அப்பகுதி மக்கள் பிரதானமாக பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது, குருநாதன் கோவில் முடக்கு சாலை பகுதியில், குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் முழுவதும், கால்வாய் வசதி இல்லாததால் சாலையில் பாய்ந்தோடுகிறது. இதனால் சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், முகம் சுளித்து செல்கின்றனர். எனவே, டவுன் பஞ்., நிர்வாகம், கழிவுநீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

