/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அனுமதியின்றி நிகழ்ச்சி நடத்திய ஹிந்து முன்னணியினர் கைது
/
அனுமதியின்றி நிகழ்ச்சி நடத்திய ஹிந்து முன்னணியினர் கைது
அனுமதியின்றி நிகழ்ச்சி நடத்திய ஹிந்து முன்னணியினர் கைது
அனுமதியின்றி நிகழ்ச்சி நடத்திய ஹிந்து முன்னணியினர் கைது
ADDED : நவ 22, 2024 01:26 AM
அனுமதியின்றி நிகழ்ச்சி நடத்திய
ஹிந்து முன்னணியினர் கைது
குளித்தலை, நவ. 22-
குளித்தலை அடுத்த, மருதுார் டவுன் பஞ்., ஆதிநத்தம் கிராமத்தில், ஹிந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான கொலைக்கார மாரியம்மன் கோவில் உள்ளது. இதன் வளாகத்தில், அரசு அனுமதியின்றி நேற்று முன்தினம், ஹிந்து முன்னணி சார்பில் உடற்பயிற்சி நடத்த ஏற்பாடு செய்தனர். இதற்கு ஆதிநத்தம் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுகுறித்து குளித்தலை போலீசார் விசாரணை செய்தனர். அதில், அரசு அனுமதியின்றி பயிற்சி நடத்த ஏற்பாடு செய்த, திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலையை சேர்ந்த ஹிந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் வடிவேல், 40, என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையறிந்த குளித்தலை ஹிந்து முன்னணி அமைப்பினர், நேற்று காலை குளித்தலை போலீஸ் ஸ்டேஷன் முன் கூடினர். டி.எஸ்.பி., செந்தில்குமாரிடம், ஹிந்து முன்னணி சார்பில் புகார் மனு கொடுத்த போது, வாய் தகராறில் ஈடுபட்டனர். இதையடுத்து, வழக்கறிஞர் பிரிவு மாநில நிர்வாக குழு உறுப்பினர் சரவணன், குளித்தலை ஹிந்து முன்னணி நகர தலைவர் ஆட்டோ துரை. திருச்சி மாவட்ட ஹிந்து முன்னணி மாவட்ட செயலாளர் சுரேஷ், திருச்சி மாவட்டம், அந்தநல்லுார் ஒன்றிய தலைவர் சுரேஷ்குமார் உள்பட, 11 பேரை போலீசார் கைது செய்து, திருமண மண்டபத்தில் வைத்தனர். இந்நிலையில் அனைவரையும் போலீசார் விடுவித்தனர்.