sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பொன்முடி மீது நடவடிக்கை எடுக்கஹிந்து முன்னணி சார்பில் மனு

/

பொன்முடி மீது நடவடிக்கை எடுக்கஹிந்து முன்னணி சார்பில் மனு

பொன்முடி மீது நடவடிக்கை எடுக்கஹிந்து முன்னணி சார்பில் மனு

பொன்முடி மீது நடவடிக்கை எடுக்கஹிந்து முன்னணி சார்பில் மனு


ADDED : ஏப் 17, 2025 01:56 AM

Google News

ADDED : ஏப் 17, 2025 01:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்:வனத்துறை அமைச்சர் பொன்முடி மீது, வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஹிந்து முன்னணி நிர்வாகிகள், நகர தலைவர் ஜெயம் கணேஷ் தலைமையில், கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று புகார் மனு அளித்தனர்.

அதில் கூறியிருப்பதாவது: தமிழக வனத்துறை அமைச்சராக உள்ள பொன்முடி, பெரியார் தி.க., ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, ஹிந்து மதம் குறித்தும், பெண்கள் குறித்தும், ஆபாசமாகவும், அறுவறுக்கதக்க வகையிலும் பேசியுள்ளார். இந்த பேச்சு, ஹிந்து மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில், பேசிய அமைச்சர் பொன்முடி மீது, காவல் துறை வழக்குப்பதிவு செய்து, சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

* இதேபோல், அரவக்குறிச்சி ஹிந்து முன்னணி ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், அரவக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகார் மனுவில், அமைச்சர் பொன்முடி மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us