ADDED : ஜூலை 27, 2026 05:52 AM
அ நிறம் | அளவு
கரூர்:கரூர் மாவட்ட
ஹிந்து முன்னணி சார்பில், மாவட்ட செயலாளர் ஜெயம் கணேஷ் தலைமையில், தலைமை
தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், தமிழகத்தில் உள்ள
கோவில்களில் தரிசன கட்டணத்தை, ரத்து செய்ய வேண்டும்; கோவில்
நிலங்களை பாதுகாக்க வேண்டும். கேரளா மாநிலத்தில் உள்ள கோவில்களில்
தரிசன கட்டணம் இல்லை. அதே போல் தமிழகத்திலும் கொண்டு வர வேண்டும்
என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் எழுப்பபட்டது.ஆர்ப்பாட்டத்தில்,
திருச்சி கோட்ட தலைவர் கனகராஜ், மாவட்ட பொதுச்செயலாளர் சக்தி,
செயலாளர் ராமகிருஷ்ணன், பொருளாளர் ரமேஷ் குமார், மாநகர செயலாளர்
காமேஷ்வரன், செயற்குழு உறுப்பினர்கள் திருநாவுக்கரசு, தரணி ரமேஷ்
குமார் உள்பட, பலர் பங்கேற்றனர்.
