தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரூரில் வெயில் தாக்கம் அதிகரிப்பு

கரூரில் வெயில் தாக்கம் அதிகரிப்பு

கரூரில் வெயில் தாக்கம் அதிகரிப்பு


ADDED : ஜூலை 27, 2026 05:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 27, 2026 05:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்:கரூரில், கோடையைபோல் வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் குடையுடன், உலா வருகின்றனர்.

தமிழகத்தில், கோடைக்காலத்தில் உச்சபட்ச காலமான அக்னி நட்சத்திர காலம், கடந்த மே, 28ல் நிறைவடைந்தது. இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், கடந்த சில நாட்களாக அதிகபட்ச வெப்ப நிலை நிலவுகிறது. கடந்த, 25 முதல் நாளை வரை, வேலுார், ஈரோடு, கரூர், மதுரை உள்ளிட்ட, எட்டு மாவட்டங்களில், நான்கு டிகிரி வெப்பம் அதிகரிக்கும் என, சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.

கரூரில் வெயிலின் தாக்கம், கடந்த, இரண்டு நாட்களாக, 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டிய நிலையில் உள்ளது. கரூரில் நேற்று, 98 டிகிரி பாரன்ஹீட் வெயில் அடித்தது. இதனால், கரூர் நகரில், நேற்று பொதுமக்கள் குடையுடன், பாதுகாப்பாக உலா வந்தனர். கரூர் நகரை சுற்றி, மதுரை, சேலம், திருச்சி, கோவை ஆகிய பகுதிகளுக்கு நெடுஞ்சாலை செல்கிறது. உச்சபட்ச வெயில் காரணமாக, இந்த சாலையில் கானல் நீர் ஆங்காங்கே தென்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us