ADDED : அக் 12, 2026 05:48 AM
அ நிறம் | அளவு
கரூர்:கரூர்
மாவட்ட இந்து முன்னணி சார்பில், மாவட்ட பொருளாளர் ரமேஷ் குமார்
தலைமையில், வெங்கமேட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில்,
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, திருப்பரங்குன்றம் தீப துாணில் தீபம்
ஏற்ற, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு
கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.ஆர்ப்பாட்டத்தில், திருச்சி
கோட்ட தலைவர் கனகராஜ், மாவட்ட பொதுச்செயலாளர் சக்தி, செயலாளர் ஜெயம்
கணேஷ், மாநகர செயலாளர் பூபதி, செயற்குழு உறுப்பினர்கள் தரணி ரமேஷ்
குமார், திருநாவுக்கரசு உள்பட பலர் பங்கேற்றனர்.
