/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஹிந்து முன்னணி நிறுவனர் பிறந்த நாள் விழா
/
ஹிந்து முன்னணி நிறுவனர் பிறந்த நாள் விழா
ADDED : செப் 20, 2025 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், ஹிந்து முன்னணி நிறுவன தலைவர் ராம கோபாலனின், 98 வது பிறந்த நாள் விழா, கரூர் மனோகரா கார்னரில், மாநகர தலைவர் ஜெயம் கணேஷ் தலைமையில் நேற்று நடந்தது.
அதில், ராமகோபாலன் உருவப்படத்துக்கு, கரூர் மாவட்ட ஹிந்து முன்னணி ஒருங்கிணைப்பாளர் சக்தி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
விழாவில், மாவட்ட பொருளாளர் ரமேஷ் குமார், மாநகர பொதுச்செயலாளர் காமேஸ்வரன், நிர்வாகிகள் கார்த்திக், சத்தியராஜ், வெற்றிவேல், மோகன்ராஜ், ராஜேஸ்குமார், சரவணன் உள்பட, பலர் பங்கேற்றனர்.