/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அம்மன் கோவில்களுக்கு தானியம் மனு அளித்த இந்து மக்கள் கட்சி
/
அம்மன் கோவில்களுக்கு தானியம் மனு அளித்த இந்து மக்கள் கட்சி
அம்மன் கோவில்களுக்கு தானியம் மனு அளித்த இந்து மக்கள் கட்சி
அம்மன் கோவில்களுக்கு தானியம் மனு அளித்த இந்து மக்கள் கட்சி
ADDED : ஜூலை 22, 2025 01:13 AM
கரூர், அம்மன் கோவில்களில், கூழ் காய்ச்சி பக்தர்களுக்கு இலவசமாக வழங்க அரிசி உள்பட தானியம் வழங்க வேண்டும் என, இந்து மக்கள் கட்சி மாவட்ட அமைப்பாளர் சுரேஷ் தலைமையில், கரூர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அதில், கூறியிருப்பதாவது:
கரூர் மாவட்டத்தில், ஹிந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், ஏராளமான அம்மன் கோவில்கள் உள்ளன. ஆடி மாதம் அம்மனுக்கு உகந்தது என்பதால், கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடக்கும். அப்போது, கூழ் காய்ச்சி பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. பல கோவில்களில், தானியங்கள் வாங்கும் அளவுக்கு போதிய வருமானம் இல்லை.
இதனை கருத்தில் கொண்டு அனைத்து அம்மன் கோவில்களுக்கும் அரிசி, கேழ்வரகு போன்றவைகளை இலவசமாக வழங்க வேண்டும். சிறுபான்மை மக்களுக்கு ரம்ஜான், நோன்பு கஞ்சி தயாரித்து வழங்கும் பொருட்டு பள்ளிவாசல்களுக்கு இலவசமாக அரிசி வழங்கப்பட்டு வருகிறது.
அதுபோல, கோவில்களுக்கு இலவசமான தானியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.