/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வீட்டு உபயோக சர்வதேச ஜவுளி கண்காட்சி விழிப்புணர்வு கருத்தரங்கம்
/
வீட்டு உபயோக சர்வதேச ஜவுளி கண்காட்சி விழிப்புணர்வு கருத்தரங்கம்
வீட்டு உபயோக சர்வதேச ஜவுளி கண்காட்சி விழிப்புணர்வு கருத்தரங்கம்
வீட்டு உபயோக சர்வதேச ஜவுளி கண்காட்சி விழிப்புணர்வு கருத்தரங்கம்
ADDED : அக் 09, 2024 06:31 AM
கரூர்: கரூரில், மத்திய அரசின் கைத்தறி ஏற்றுமதி அபிவிருத்தி குழுமம் சார்பில், வீட்டு உபயோக சர்வதேச ஜவுளி கண்காட்சி தொடர்பாக விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
செயல் இயக்குனர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். வீட்டு உபயோக சர்வதேச ஜவுளி கண்காட்சி, ஜெர்மனியில் உள்ள பிராங்க்பர்ட் நகரில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் நடக்கிறது. கண்காட்சியில் இந்தியாவிலிருந்து, 350க்கும் மேற்பட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் பங்கேற்க உள்ளனர். இதில், 75க்கும் மேற்பட்டோர் கரூரில் இருந்து கலந்து கொள்கின்றனர். அவர்களுக்கு, ஜவுளி பொருட்களை காட்சிபடுத்தும்போது, கண்கவர் நிறங்களை பயன்படுத்தி தயார் செய்து, வெளிநாட்டு வியாபாரிகளை ஈர்த்து ஆர்டர்களை பெறுவது எப்படி என்பது குறித்து, வியாபார உத்திகளை தேசிய ஜவுளி வடிவமைப்பு கல்லுாரி பேராசிரியர்கள் கூறினர்.நிகழ்ச்சியில், கரூர் ஜவுளி உற்பத்தியாளர், ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் கோபாலகிருஷ்ணன், உள்பட பலர் பங்கேற்றனர்.