/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
திருச்செங்கோடு தீ விபத்தில் வீடு நாசம்
/
திருச்செங்கோடு தீ விபத்தில் வீடு நாசம்
ADDED : டிச 20, 2024 01:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்செங்கோடு.டிச.20-
திருச்செங்கோடு, 29வது வார்டு சாணார்பாளையத்தை சேர்ந்த பிரகாஷ்,51. இவரது மனைவி சிவகாமி. இருவரும் கூலிவேலை செய்து வருகின்றனர். கூரை வீட்டில் வசித்து வருகின்றனர். நேற்று காலை, இருவரும் மகன்களை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, கூலி வேலைக்கு சென்றனர். காலை, 10:30 மணியளவில் வீடு தீப்பிடித்து எரிந்தது.
திருச்செங்கோடு தீயணைப்பு நிலைய அலுவலர் கரிகாலன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். தீ விபத்தில் ஒரு லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் வீடும் நாசமானது. கூரை வீட்டில் ஏற்பட்ட மின்கசிவால் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக
தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.