/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அ.தி.மு.க., சார்பில் வீடு, வீடாக வாக்காளர் பட்டியல் சரி பார்க்கும் பணி

ADDED : ஜூலை 12, 2025 01:36 AM
கரூர் :கரூர் அருகே வீடு, வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சரி பார்க்கும் பணியை, அ.தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் தொடங்கி வைத்தார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் எட்டு மாதங்களே உள்ளன. இந்நிலையில், வாக்காளர் பட்டியல் சரி பார்க்கும் பணி, 10 ஆண்டுகளாக அ.தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து துண்டு பிரசுரங்களை வீடு, வீடாக சென்று வழங்குதல் உள்ளிட்ட பணிகளை அ.தி.மு.க.,வினர் மேற்கொள்ள வேண்டும் என, கட்சியின் பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., சமீபத்தில் அறிவித்திருந்தார்.
அதன்படி கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டசபை தொகுதிக்குட்பட்ட, வேட்டமங்கலம் பஞ்சாயத்து பகுதிகளில், நேற்று மாவட்ட அ.தி.மு.க., செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர், வீடு வீடாக சென்று, வாக்காளர் பட்டியலை சரி பார்க்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.
மேலும் கடந்த, 2011-21 வரை, 10 ஆண்டுகள் அ.தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட நல திட்டங்கள் குறித்த, துண்டு பிரசுரங்களும் மக்களுக்கு வழங்கப்பட்டது. அப்போது, கரூர் மேற்கு ஒன்றிய செயலாளர் கமலகண்ணன், புகழூர் நகர செயலாளர் விவேகானந்தன் உள்ளிட்ட, அ.தி.மு.க., நிர்வாகிகள் உடனிருந்தனர்.