/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஏப்.,28 வரை ஹெச்.பி.வி., தடுப்பூசி முகாம்
/
ஏப்.,28 வரை ஹெச்.பி.வி., தடுப்பூசி முகாம்
ADDED : மார் 05, 2026 07:07 AM
கரூர்:வரும்
ஏப்., 28 வரை, 14 வயது பெண் குழந்தைகளுக்கு ஹெச்.பி.வி., தடுப்பூசி
செலுத்தப்படும் என, கலெக்டர் ரவி-குமார் தெரிவித்துள்ளார்.
அவர், வெளியிட்ட அறிக்கை:
கரூர்
அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள்
மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலை-யங்களில், மக்கள் நலவாழ்வுத் துறை
சார்பில் ஹெச்.பி.வி., தடுப்பூசி முகாம் ஏப்., 28 வரை நடக்கிறது. அரசு
மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில், 14 வயது
வரை-யுள்ள, 4,501 பெண் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ், 11 வகையான தடுப்பூசி
கர்ப்-பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு,
நோய்களிலி-ருந்து பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் ஆண்டுதோறும், 1.2 லட்சம் பெண்களுக்கு கர்ப்பப்பைவாய்
புற்-றுநோய் புதிதாக கண்டறியப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில்
பெண்களை பாதிக்கும் புற்றுநோய்களில் மார்பக புற்றுநோய்க்கு 28.7
சதவீதம், அடுத்தப்படியாக கர்ப்பப்பைவாய் புற்றுநோய், 14 சதவீதம்
கண்டறியப்பட்டுள்ளது. இந்நோய்க்கு ஹெச்.பி.வி. தடுப்பூசி
செலுத்துவதின் மூலம், 99.7 சதவீதம் தடுக்க முடியும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

