/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரூ.1,150 கோடி மதிப்பில் மாநகராட்சி வளர்ச்சி திட்டப் பணி
/
ரூ.1,150 கோடி மதிப்பில் மாநகராட்சி வளர்ச்சி திட்டப் பணி
ரூ.1,150 கோடி மதிப்பில் மாநகராட்சி வளர்ச்சி திட்டப் பணி
ரூ.1,150 கோடி மதிப்பில் மாநகராட்சி வளர்ச்சி திட்டப் பணி
ADDED : மார் 05, 2026 07:08 AM

கரூர்:''கரூர்
மாநகராட்சிக்கு மட்டும், 1,150 கோடி ரூபாய் மதிப்பில் வளர்ச்சி திட்டப்
பணி செய்யப்பட்டுள்ளது,'' என, கரூர் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி
தெரிவித்தார்.
கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
வளாகத்தில், 2.40 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நீச்சல்
குளத்தை, கரூர் எம்.எல்.ஏ.,வும், முன்னாள் அமைச்சருமான
செந்தில்-பாலாஜி திறந்து வைத்தார்.
பின், அவர் நிருபர்களிடம்
கூறியதாவது: கரூர் மாநகராட்சி பகுதிகளில், மண் சாலைகள்
கணக்கெடுத்து, அந்த இடத்தில் புதிய தார்ச் சாலைகளாக அமைக்க வேண்டிய
பணிகளும், அதே-போல சாக்கடை வசதி, தெருவிளக்கு, கட்டட பணிகள் என
பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் முன்வைத்தனர். கரூர்
மாநகராட்சியில், 418 கோடி ரூபாய் அளவிற்கு சாலை வசதி, சாக்கடை வசதி,
தெருவிளக்குகள், கட்டட பணிகள் என அடிப்-படை கட்டமைப்பு வசதிகள்
செய்யப்பட்டுள்ளது.
புதிதாக புதிய காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம்
அமைப்பதற்காக, 245 கோடி ரூபாய் மதிப்பில் பணிகளும் தொடங்க
இருக்கிறோம். விடு-பட்ட பகுதிகளுக்கான பாதாள சாக்கடை திட்டம், 485
கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில், கரூர் மாநகராட்சிக்கு மட்டும், 1,150 கோடி
ரூபாய் மதிப்பில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு கூறினார்.
நிகழ்ச்சியில்
டி.ஆர்.ஓ., விமல்ராஜ், எம்.எல்.ஏ.,க்கள் இளங்கோ, சிவகாமசுந்தரி,
மாநகராட்சி மேயர் கவிதா, மாநகராட்சி ஆணையர் சுதா, துணை மேயர் சரவணன்,
மண்டல குழு தலை-வர்கள் கனகராஜ், அன்பரசு, ராஜா, சக்திவேல் உள்பட பலர்
பங்கேற்றனர்.

