/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மதுவுக்கு எதிரான மனித சங்கிலி விழிப்புணர்வு
/
மதுவுக்கு எதிரான மனித சங்கிலி விழிப்புணர்வு
ADDED : அக் 25, 2025 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை :குளித்தலை, அரசு கலைக் கல்லுாரியில் போதை ஒழிப்பு குழு சார்பில், மனித சங்கிலி விழிப்புணர்வு நடந்தது.
கல்லுாரி முதல்வர் சுஜாதா தலைமை வகித்தார். கல்லுாரி மாணவ, மாணவியர் ஒருவரை ஒருவர் மனித சங்கிலியாக கைகளை கோர்த்தபடி, மதுவுக்கு எதிரான விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பினர்.
இந்நிகழ்வில் மின்னணுவியல் துறை தலைவர் அன்பரசு, அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்று, உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை கல்லுாரி போதை ஒழிப்பு குழு ஒருங்கிணைப்பாளர் வைர மூர்த்தி, பேராசிரியர்கள் சக்திவேல், சுபத்ரா ஆகியோர் செய்திருந்தனர்.

