/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மனித உரிமைகள் தின விழா: கல்லுாரியில் உறுதிமொழி ஏற்பு
/
மனித உரிமைகள் தின விழா: கல்லுாரியில் உறுதிமொழி ஏற்பு
மனித உரிமைகள் தின விழா: கல்லுாரியில் உறுதிமொழி ஏற்பு
மனித உரிமைகள் தின விழா: கல்லுாரியில் உறுதிமொழி ஏற்பு
ADDED : டிச 11, 2024 01:46 AM
மனித உரிமைகள் தின விழா: கல்லுாரியில் உறுதிமொழி ஏற்பு
குளித்தலை, டிச. 11-
குளித்தலை, அரசு கலைக் கல்லுாரியில் நேற்று மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.
அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களில், ஒவ்வொரு ஆண்டும் டிச., 10ம் தேதி மனித உரிமைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதன்படி, மனித உரிமைகள் தினம், குளித்தலை அரசு கலைக்கல்லுாரி முதல்வர் (பொ) அன்பரசு தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. தமிழ் துறை தலைவர் பேராசிரியர் ஜெகதீசன் உறுதி
மொழி வாசிக்க, பேராசிரியர்கள், மாணவ மாணவியர் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இந்நிகழ்வில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பேராசிரியர் வேணுகோபால், உடற்கல்வி இயக்குனர் (பொ) பேராசிரியர் வைரமூர்த்தி, தமிழ்த்துறை பேராசிரியர்கள் சரவணன், கோபாலகிருஷ்ணன், ஜெய்சங்கர், ஜெயராஜ், விஜயலட்சுமி நதி, சுரேஷ், பிரபாகரன், சந்திரசேகரன், கோபாலகிருஷ்ணன் மற்றும் மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.