/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மனித சங்-கிலி பேரணி
/
உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மனித சங்-கிலி பேரணி
உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மனித சங்-கிலி பேரணி
உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மனித சங்-கிலி பேரணி
ADDED : டிச 05, 2025 10:58 AM

கரூர்: கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, எய்ட்ஸ் விழிப்பு-ணர்வு உறுதிமொழி ஏற்பு மற்றும் மனித சங்கிலி பேரணி நடந்தது.
கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்து கூறிய-தாவது: கரூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்படும், நடமாடும் நம்பிக்கை மையங்கள் மூலமாக ஒருங்கிணைந்த ஆலோசனை மற்றும் பரிசோ-தனை மையங்களில் இலவச எச்.ஐ.வி., பரிசோ-தனை, சுகவாழ்வு மையங்களில் பால்வினை நோய் குறித்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவம-னையில், கூட்டு மருந்து சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. இதில், 2,687 பேர் கிகிச்சை பெற்று வருகின்றனர்.
எச்.ஐ.வி., எய்ட்ஸால் பாதிக்கப்பட்டு தாய், தந்தையை இழந்து பள்ளியில் பயின்று வரும் மாணவ மாண-வியருக்கு, 18 வயது பூர்த்தி அடையும் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 2024ம் ஆண்டு முதல் கல்வி உதவித்தொகை, 160 குழந்-தைகளுக்கு ஒவ்வொரு மாதமும், 1,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. குளித்தலை, வேலாயு-தம்பாளையம், மைலம்பட்டி மற்றும் பள்ளப்பட்டி அரசு மருத்துவமனைகளில், இணை சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மனித சங்கிலி பேரணியில், 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் இணை இயக்குனர் (நலப் பணிகள்) செழியன், துணை இயக்குனர் (சுகா-தாரப் பணிகள்) சுமதி, மருத்துவக் கல்லுாரி கண்-காணிப்பாளர் ராஜா, மாவட்ட திட்ட மேலாளர் துரைசாமி, மாவட்ட மேற்பார்வையாளர் செல்வ-குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

