/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் உண்ணாவிரதம்
/
சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் உண்ணாவிரதம்
ADDED : நவ 13, 2024 07:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் செல்வ ராணி தலைமையில், கலெக்டர் அலுவலகம் முன், உண்ணாவிரத போராட்டம் நடந்தது. தமிழக முதல்வர் ஸ்டாலின், சட்டசபை தேர்தல் கால, வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். சத்துணவு ஊழியர்களின், 40 ஆண்டு கால கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
உண்ணாவிரத போராட்டத்தில், மாநில பொதுச்செயலாளர் மலர் விழி, செயற்குழு உறுப்பினர் தமிழ்மணி, மாவட்ட செயலாளர் சிவகாமி, பொருளாளர் தனலட்சுமி, அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் செல்வராணி, அன்பழகன் உள்பட பலர் பங்கேற்றனர்.