/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மனைவி, மகள் மாயம் போலீசில் கணவர் புகார்
/
மனைவி, மகள் மாயம் போலீசில் கணவர் புகார்
ADDED : டிச 13, 2024 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை, டிச. 13-
குளித்தலை அடுத்த, நல்லுார் கிராமத்தை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி விக்னேஷ், 27. இவரது மனைவி நாகலட்சுமி, 23. இவர்களுக்கு, ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் காலை 9:00 மணியளவில் குழந்தைக்கு காய்ச்சல் அதிகமாக இருப்பதால், குளித்தலை அரசு மருத்துவமனைக்கு சென்று வருவதாக நாகலட்சுமி கூறி விட்டு சென்றார். அதன் பின் அவர் வீட்டுக்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. மனைவி, மகளை காணவில்லை என
விக்னேஷ் கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.