/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
'அ.தி.மு.க.,வின் நோக்கம், லட்சியம் மாறியதால் பா.ஜ.,வில் இணைந்தேன்'
/
'அ.தி.மு.க.,வின் நோக்கம், லட்சியம் மாறியதால் பா.ஜ.,வில் இணைந்தேன்'
'அ.தி.மு.க.,வின் நோக்கம், லட்சியம் மாறியதால் பா.ஜ.,வில் இணைந்தேன்'
'அ.தி.மு.க.,வின் நோக்கம், லட்சியம் மாறியதால் பா.ஜ.,வில் இணைந்தேன்'
ADDED : பிப் 10, 2024 10:24 AM
கரூர்: ''அ.தி.மு.க.,வின் நோக்கம், லட்சியம் மாறியதால், பா.ஜ.,வில் இணைந்தேன்,'' என, கரூர் முன்னாள் எம்.எல்.ஏ., வடிவேல் தெரிவித்தார்.
கரூரில் உள்ள, பா.ஜ., அலுவலகத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் முன்னாள் முதல்வர்கள் காமராஜர், அண்ணாதுரை, எம்.ஜி.ஆரை பிடிக்கும். அகில இந்திய அளவில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், பிரதமர் மோடி ஆகியோரை பிடிக்கும். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, பன்னீர் செல்வம் அணியில் இருந்தேன்.
பிறகு, அ.தி.மு.க., இணைந்த போது, பழனிசாமி தலைமையை ஏற்றேன். அங்கு உரிய அங்கீகாரம் இல்லை. அ.தி.மு.க.,வின் நோக்கம், லட்சியம் மாறியதால் பா.ஜ.,வில் இணைந்தேன். வரும் எம்.பி., தேர்தலில் போட்டியிடுவது குறித்து, பா.ஜ., தலைமைதான் முடிவு செய்யும்.இவ்வாறு கூறினார். மாவட்ட பா.ஜ., தலைவர் செந்தில் நாதன் உடனிருந்தார்.