/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
டாஸ்மாக் மதுபான கடை பகுதியில் சட்ட விரோத பார்களால் மக்கள் அவதி
/
டாஸ்மாக் மதுபான கடை பகுதியில் சட்ட விரோத பார்களால் மக்கள் அவதி
டாஸ்மாக் மதுபான கடை பகுதியில் சட்ட விரோத பார்களால் மக்கள் அவதி
டாஸ்மாக் மதுபான கடை பகுதியில் சட்ட விரோத பார்களால் மக்கள் அவதி
ADDED : ஆக 28, 2024 07:41 AM
கரூர்: கரூர் மாவட்டத்தில், டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ள பகுதிகளில், விதிகளை மீறி, திறந்த வெளியில் பார்கள் செயல்படுகிறது. இதனால் பெண்கள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
தமிழகத்தில், டாஸ்மாக் மதுபான கடைகளில், குடிமகன்கள் மது அருந்தும் வகையில், பார்கள் செயல்பட்டு வருகிறது. மேலும் மதுபான கடைகள் உள்ள பகுதிகளில், அனுமதி இல்லாமல், திறந்த வெளியில் பார்கள் செயல்படுகின்றன. அதில், பிளாஸ்டிக் டம்ளர், கூல்டிரிங்ஸ், உணவு பொருட்கள் தாராளமாக விற்பனை செய்யப்படுகிறது. டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு செல்லும், குடிமகன்கள் திறந்த வெளி பாரில் உணவு பொருட்களை, வாங்கி கொண்டு அங்கேயே, நின்று கொண்டு மது அருந்துகின்றனர். பிறகு, சாலைகளில் பாட்டில்களை வீசி விட்டு செல்கின்றனர். சிலர் சாலையில் செல்வோரிடம் தகராறு செய்கின்றனர்.
போலீசார் மற்றும் டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகள் இதை கண்டுகொள்வது இல்லை. கரூர் மாவட்டத்தில் பெரும்பாலான டாஸ்மாக் கடை பகுதி வழியாக செல்ல முடியாமல் பெண்கள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். குறிப்பாக கரூர் பஸ் ஸ்டாண்ட், கோவை சாலை, காமராஜ் தினசரி மார்க்கெட், கவுரிபுரம் சாலை, வெங்கமேடு, தான்தோன்றி மலை, பசுபதிபாளையம் நகரப்பகுதிகளில், சாலையில் நின்று கொண்டே, குடிமகன்கள் தாராளமாக மது அருந்துகின்றனர். இதனால், அந்த பகுதிகளில் நாள்தோறும் தகராறு ஏற்படுகிறது. எனவே, டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் சட்ட விரோதமாக செயல்படும், திறந்த வெளி பார்களை மூட, கரூர் மாவட்ட காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.