/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தென்மேற்கு பருவமழையை எதிர்பார்த்து மானாவரி நிலங்களில் விவசாய பணி துவக்கம்

ADDED : மார் 18, 2024 03:32 AM
கரூர்: நடப்பாண்டு தென்மேற்கு பருவமழையை எதிர்பார்த்து, கரூர் மாவட்டத்தில் மானாவரி நிலங்களில், விவசாய பணி துவங்கியது.
கரூர் மாவட்டத்தில், ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை ஆண்டு சராசரியாக, 652.20 மி.மீட்டர் மழை பெய்ய வேண்டும். கடந்தாண்டு, வடகிழக்கு பருவமழை மற்றும் தென்மேற்கு பருவ மழை எதிர்பார்த்த அளவில் பெய்தது. வழக்கமாக மே மாத இறுதி அல்லது ஜூன் மாதம் தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். கரூர் மாவட்டத்தில், கடந்த பிப்ரவரி மாதத்தில், எதிர்பார்த்த மழை பெய்ய வில்லை.
இதனால், கரூர் மாவட்ட விவசாயிகள், தென் மேற்கு பருவ
மழையை எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில், நடப்பு மார்ச் மாதத்தில் வரும், 20 முதல் கோடை மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால், தென்மேற்கு பருவ
மழையை எதிர்பார்த்து, கரூர் மாவட்டத்தில் மானாவரி விவசாய நிலங்களில், விவசாய பணியை துவங்கியுள்ளனர்.
குறிப்பாக, அரவக்குறிச்சி சுற்று வட்டார பகுதியில் முருங்கை சாகுபடி விறுவிறுப்பாக துவங்கியுள்ளது. இதை தவிர, எண்ணெய் வித்து பயிர் சாகுபடி பணிகளிலும், விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.