sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர் தொகுதியில் கூட்டணி கட்சிகள் போட்டி தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள் அதிருப்தி

/

கரூர் தொகுதியில் கூட்டணி கட்சிகள் போட்டி தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள் அதிருப்தி

கரூர் தொகுதியில் கூட்டணி கட்சிகள் போட்டி தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள் அதிருப்தி

கரூர் தொகுதியில் கூட்டணி கட்சிகள் போட்டி தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள் அதிருப்தி


ADDED : மார் 07, 2024 02:10 AM

Google News

ADDED : மார் 07, 2024 02:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் லோக்சபா தொகுதியை, தொடர்ந்து கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்வதால், தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இந்திய லோக்சபாவின் இரண்டாவது தேர்தலின் போது, 1957ம் ஆண்டு கரூர் தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை நடந்துள்ள, 16 தேர்தல்களில் காங்., மற்றும் அ.தி.மு.க., கட்சிகள் அதிக முறை போட்டியிட்டுள்ளன. இதில், 7 முறை காங்.,

6 முறை அ.தி.மு,க., மற்றும் சுதந்திரா கட்சி, - தி.மு.க., - த.மா.கா., தலா ஒரு முறை

வென்றுள்ளன.

குறிப்பாக, 1989லிருந்து நடந்த, 9 தேர்தலில்களில் அ.தி.மு.க., போட்டியிட்டு, 6 முறை வெற்றி பெற்றுள்ளது. ஆனால், தி.மு.க.,வோ, 1967ல் கூட்டணியில் இருந்த ராஜகோபாலாச்சாரி சுதந்திரா கட்சியும், 1971 தி.மு.க., கூட்டணி காங்கிரஸ் (இந்திரா), 1980ல் தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ், 1996 கூட்டணியில் த.மா.கா., 2019 கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட்டன.

இதுவரை நடந்த, 16 தேர்தல்களில், 1984, 1989, 1999, 2004, 2009, 2014 ஆகிய ஆறு தேர்தல்களில் போட்டியிட்டு, ஒரு முறை மட்டுமே (2004ம் ஆண்டு) தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது. தொடர்ந்து கரூர் லோக்சபா தொகுதியை, கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. தி.மு.க.,வுடன் அ.தி.மு.க., நேரடியாக போட்டியிடாத காரணத்தால், இங்கு, அ.தி.மு.க., அதிக முறை வெற்றி பெற்று வருகிறது.

தொடர்ந்து கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்தால், கட்சி வளர்ச்சி பாதிக்கும். இனியாவது, கரூர் லோக்சபா தொகுதியை, தி.மு.க., போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என, அக்கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளின் கோரிக்கையாக உள்ளது.






      Dinamalar
      Follow us