/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
போதிய பராமரிப்பு இல்லாத வாகனங்கள்; விபத்தில் உயிரிழப்பு ஏற்படும் அபாயம்
/
போதிய பராமரிப்பு இல்லாத வாகனங்கள்; விபத்தில் உயிரிழப்பு ஏற்படும் அபாயம்
போதிய பராமரிப்பு இல்லாத வாகனங்கள்; விபத்தில் உயிரிழப்பு ஏற்படும் அபாயம்
போதிய பராமரிப்பு இல்லாத வாகனங்கள்; விபத்தில் உயிரிழப்பு ஏற்படும் அபாயம்
ADDED : மார் 08, 2024 07:14 AM
கரூர்: கல் குவாரிகளுக்கு, போதிய பராமரிப்பு இல்லாத வாகனங்கள் இயக்கப்பட்டு வருவதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில், 200க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. கல்குவாரி பாறைகளில் இருந்து வெடி வைத்து தகர்த்து கற்கள், ஜல்லிகள் வாகனங்கள் மூலம் கிரஷர் செயல்படும் இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. இங்குள்ள, கல்குவாரிகள் பல்வேறு இடங்களில், 300 அடி ஆழம் கொண்டவைகளாக உள்ளன. கல்குவாரிகளில் எடுக்கப்படும் கற்கள் டிப்பர் லாரி, டிராக்டர்கள் மூலம் மேலே கொண்டு வரப்படுகிறது. பல்வேறு குவாரிகளில் பயன்படுத்தப்படும் வாகனங்கள், போதிய பராமரிப்பின்றி தினசரி இயக்கப்படுகிறது.
இது குறித்து, வட்டார போக்குவரத்து அலுவலர் ஒருவர் கூறியதாவது: குவாரிகளில் உள்ள வாகனங்களில் உரிய ஆவணங்கள் முறையாக இல்லை. அப்படி இருந்தாலும், அவைகள் புதுப்பிப்பது கிடையாது. இதனால் ஏதேனும் விபத்து ஏற்பட்டாலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் பெற முடிவதில்லை. முறையான பராமரிப்பு இல்லாமல் இயக்கப்படும் லாரிகளால், குவாரிகளில் பெரும் விபத்துக்கள், உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. பராமரிப்பின்றியும், ஆவணங்கள் இன்றியும் வாகனங்கள் இயக்கப்பட்டது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

