ADDED : அக் 21, 2026 06:02 AM
அ நிறம் | அளவு
கரூர்:கரூர்
அருகே, சுக்காலியூர் ரவுண்டானாவில், கோவை சாலை, திருச்சி சாலை, கோவை
சாலை மற்றும் கரூர் நகர சாலைகள் பிரியும் இடத்தில், உயர்மட்ட கம்பத்தில்
மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், அதில் உள்ள
பெரும்பாலான விளக்குகள் எரிவது இல்லை.
மேலும், ரவுண்டானாவை சுற்றி
அமைக்கப்பட்டுள்ள, மின் கம்பங்களிலும், முழுமையாக விளக்குகள்
எரிவது இல்லை. இதனால், சுக்காலியூர் ரவுண்டானா பகுதிகள் இரவு
நேரத்தில் இருளில் மூழ்கியுள்ளது. தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள்
நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
