/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிருஷ்ணராயபுரம் பகுதியில் வெற்றிலை விலை உயர்வு
/
கிருஷ்ணராயபுரம் பகுதியில் வெற்றிலை விலை உயர்வு
ADDED : அக் 30, 2024 11:53 PM
கிருஷ்ணராயபுரம்,:கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், வெற்றிலை விலை உயர்ந்துள்ளது.
கிருஷ்ணராயபுரம்
ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளபாளையம், வல்லம்,
கொம்பாடிப்பட்டி, வீரகுமரான்பட்டி, கள்ளப்பள்ளி, கருப்பத்துார்
ஆகிய இடங்களில், வெற்றிலை சாகுபடி செய்து வருகின்றனர்.
வெற்றிலைகள் பறிக்கப்பட்டு, லாலாப்பேட்டை கமிஷன் மண்டிக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.கடந்த
வாரம் வெற்றிலை விலை குறைந்திருந்தது. தற்போது தீபாவளி பண்டிகையை
முன்னிட்டு 100 கவுளி கொண்ட வெற்றிலை மூட்டை, 4,500 ரூபாய்க்கு
விற்கப்பட்டது. மூட்டைக்கு, 1,000 ரூபாய் விலை உயர்ந்ததால்,
விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். மொத்தமாக வாங்கிய வியாபாரிகள்,
வெளி இடங்களில் சில்லரையில் விற்பனை செய்கின்றனர்.