/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மெழுகு பேப்பர், பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு
/
மெழுகு பேப்பர், பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு
ADDED : டிச 19, 2024 01:08 AM
அரவக்குறிச்சி, டிச. 19-
அரவக்குறிச்சியில், உணவு விடுதி, பேக்கரி ஆகியவற்றில் மெழுகு பேப்பர், பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது.
அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பாஸ்ட் புட் கடைகள், தள்ளுவண்டி இரவு நேர கடைகள், சிற்றுண்டிகள், விடுதிகள், டீக்கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு இட்லி, தோசை, சில்லி சிக்கன் உள்ளிட்ட உணவு பொருட்கள் மெழுகு தடவிய பேப்பர் மற்றும் வாழை இலை போன்ற வடிவில் உள்ள செயற்கை இலைகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பார்சல் கட்டிக் கொடுக்கப்படுகிறது.
டீக்கடைகளில் கண்ணாடி டம்ளருக்கு பதிலாக, மெழுகு தடவிய பேப்பர் கப்புகளில் டீ வழங்குகின்றனர். அதேபோல் பஜ்ஜி, போண்டா உள்ளிட்ட எண்ணெய்களில் செய்யப்படும் திண்பண்டங்கள், அச்சிட்ட காகிதங்களில் சூடாக மடித்து தரப்படுகிறது. இவை சூட்டில் உணவு பொருட்களுடன் கரைந்து, கேன்சர் உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே இதனை கட்டுப்படுத்த, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

