/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அமராவதி ஆற்று பகுதியில் மழை பெ.கோவில் தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
/
அமராவதி ஆற்று பகுதியில் மழை பெ.கோவில் தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
அமராவதி ஆற்று பகுதியில் மழை பெ.கோவில் தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
அமராவதி ஆற்று பகுதியில் மழை பெ.கோவில் தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
ADDED : அக் 11, 2024 01:06 AM
அமராவதி ஆற்று பகுதியில் மழை
பெ.கோவில் தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கரூர், அக். 11--
அமராவதி ஆற்று பகுதியில் மழை பெய்து வருவதால், பெரியாண்டாங்கோவில் தடுப்பணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி வினா-டிக்கு தண்ணீர் வரத்து, 529 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து ஆற்றில், 517 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. பாசன வாய்க்காலில் வினாடிக்கு, 105 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 90 அடி கொண்ட அமராவதி அணை நீர்மட்டம், 77.79 அடியாக உள்ளது.
அமராவதி அணையில் இருந்து, திறப்பு குறைவாக இருந்தாலும் மழை காரணமாக கரூர் அருகே, பெரியாண்டாங்கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், பாசன வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
* கரூர் அருகே மாயனுார் கதவணைக்கு, நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து வினாடிக்கு, 16,742 கன அடியாக இருந்தது. காவிரி ஆற்றில், 15,472 கனஅடியும், தென்கரை பாசன வாய்க்கால், கீழ் கட்டளை வாய்க்கால், கிருஷ்-ணராயபுரம் பாசன வாய்க்கால் உள்ளிட்ட நான்கு வாய்க்காலில், 1,270 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
* க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பா-ளையம் அணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 16.69 அடியாக இருந்ததால், நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
மழை நிலவரம்: கரூர் மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி வரை கடந்த, 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விபரம் (மி.மீ.,) கரூர், 1.80, அரவக்குறிச்சி, 9, அணைபாளையம், 18.20 மி,மீ., மழை பெய்துள்ளது.