/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மழை காரணமாக செட்டிப்பாளையம் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
/
மழை காரணமாக செட்டிப்பாளையம் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
மழை காரணமாக செட்டிப்பாளையம் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
மழை காரணமாக செட்டிப்பாளையம் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
ADDED : அக் 27, 2024 01:13 AM
மழை காரணமாக செட்டிப்பாளையம்
அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
கரூர், அக். 27-
மழை காரணமாக கரூர் அருகே, செட்டிப்பாளையம் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையில் இருந்து மழை காரணமாக கடந்த, 12ல் ஆற்றில் தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டது. பிறகு, கடந்த சில நாட்களாக அணையில் இருந்து வினாடிக்கு, 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும், கரூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, செட்டிப்பாளையம் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
மழை நிலவரம்:
கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை, வானம் மேக மூட்டமாக காணப்பட்டது. சில பகுதிகளில், சாரல் மழை குளிர்ந்த காற்றுடன் விட்டு விட்டு பெய்தது. நேற்று காலை, 8:00 மணியுடன் முடிந்த, 24 மணி நேரத்தில், கரூர் மாவட்டத்தில் பெய்த மழையளவு (மி.மீ.,) கரூர், 9.80, அரவக்குறிச்சி, 13, அணைப் பாளையம், 26.20, க.பரமத்தி, 31.40, குளித்தலை, 21.40, கிருஷ்ணராயபுரம், 2.60, மாயனுார், 2, பாலவிடுதி, 4.20, மயிலம் பட்டி, 4 ஆகிய அளவுகளில் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக, 9.53 மி.மீ., மழை பதிவானது.