/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அகில இந்திய கூடைப்பந்து போட்டி துவக்கம் முதல் போட்டியில் இந்தியன் நேவி அணி வெற்றி

ADDED : மே 23, 2025 01:11 AM
கரூர், கரூரில், அகில இந்திய கூடைப்பந்து போட்டி நேற்று துவங்கியது. முதல் போட்டியில் இந்தியன் நேவி அணி வெற்றி பெற்றது.
கரூர், திருவள்ளுவர் மைதானத்தில் கூடைப்பந்து கிளப் சார்பில், எல்.ஆர்.ஜி. நாயுடு சுழற்கோப்பைக்கான, 64வது ஆண்டு அகில இந்திய கூடைப்பந்து போட்டி நேற்று தொடங்கியது. மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன் தொடங்கி வைத்தார். லீக் மற்றும் நாக் அவுட் முறையில் போட்டிகள் நடக்க உள்ளன. 8 ஆண்கள் அணி, 4 பெண்கள் அணி பங்கேற்கின்றன.
நேற்று நடந்த ஆண்கள் பிரிவின் முதல் போட்டியில், இந்தியன் நேவி, பெங்களூரு யங் ஒரியன்ஸ் அணிகள் மோதின.
விறுவிறுப்பான ஆட்டத்தில், 78-58 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் இந்தியன் நேவி வெற்றி பெற்றது. ஆண்கள் அணிக்கு முதல் பரிசாக, ஒரு லட்ச ரூபாய், இரண்டாம் பரிசாக, 80 ஆயிரம், மூன்றாவது பரிசாக, 60 ஆயிரம், நான்காவது பரிசாக, 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. பெண்கள் அணிக்கு முதல் பரிசாக, 75 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக, 40 ஆயிரம், மூன்றாவது பரிசாக, 30 ஆயிரம், நான்காவது பரிசாக, 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.விழாவில் மாவட்ட கூடைப்பந்து கிளப் தலைவர் பாஸ்கர், மாவட்ட கூடைப்பந்து கிளப் செயலாளர் முகமது கமாலுதீன் உள்பட பலர் பங்கேற்றனர்.