/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
க.பரமத்தியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வலியுறுத்தல்
/
க.பரமத்தியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வலியுறுத்தல்
க.பரமத்தியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வலியுறுத்தல்
க.பரமத்தியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வலியுறுத்தல்
ADDED : ஏப் 25, 2025 01:28 AM
அரவக்குறிச்சி:
க.பரமத்தியில், தீயணைப்பு நிலையம் தேவை என, பலரும் எதிர்பார்க்கின்றனர். கரூரிலிருந்து, கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வளர்ந்து வரும் நகராக க.பரமத்தி உள்ளது. க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில், 30 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. தேசிய நெடுஞ்சாலையையொட்டி, கிராம பஞ்சாயத்துகள் உள்ளதால் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. மேலும் தீ விபத்து, இதனால் ஏற்படும் உயிரிழப்பு போன்றவற்றை தடுக்க க.பரமத்தியில் தீயணைப்பு நிலையம் இல்லை.
இப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டால், கரூர், அரவக்குறிச்சி, வேலாயுதம்பாளையத்தில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வருகின்றன. சம்பவ இடத்திற்கு செல்ல நீண்ட நேரமாவதால் உயிர் சேதம், பொருட்சேதம் அதிகளவில் ஏற்படுகிறது. எனவே, க.பரமத்தி பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.