தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/மினி பஸ் இயக்க வலியுறுத்தல்

மினி பஸ் இயக்க வலியுறுத்தல்

மினி பஸ் இயக்க வலியுறுத்தல்


ADDED : ஜூலை 13, 2026 04:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 13, 2026 04:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கரூர்:கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தான்தோன்றிமலை பகுதிகளில், 30,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள், காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு செல்லவேண்டும் என்றால், கரூர் சுங்ககேட் சென்று, அங்கிருந்து மற்றொரு பஸ்சில்சென்றுவருகின்றனர்.

இல்லையெனில், கரூர் பழைய பஸ் ஸ்டாண்ட் சென்று, அங்கிருந்து பஸ் பிடித்து அரசு மருத்துவ கல்லுாரி செல்ல வேண்டும். இப்பகுதியில் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள் உள்பட பலரும் பஸ் வசதி இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். தான்தோன்றிமலை பஸ் ஸ்டாப்பிலிருந்து கணபதிபாளையம், விக்னேஸ்வரா நகர், காமராஜ் நகர், பசுபதி நகர், சக்திபுரம், சிவாஜி நகர், அண்ணா நகர், மகாலட்சுமி நகர் வழியாக கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை வரையிலும், காந்தி கிராமம் டபுள் டேங் வரையிலும் மினி பஸ் இயக்க இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us