/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
க.பரமத்தி ஆட்டு பண்ணையில் கால்நடை துறை இயக்குனர் ஆய்வு
/
க.பரமத்தி ஆட்டு பண்ணையில் கால்நடை துறை இயக்குனர் ஆய்வு
க.பரமத்தி ஆட்டு பண்ணையில் கால்நடை துறை இயக்குனர் ஆய்வு
க.பரமத்தி ஆட்டு பண்ணையில் கால்நடை துறை இயக்குனர் ஆய்வு
ADDED : நவ 14, 2024 07:11 AM
கரூர்: க.பரமத்தி அருகே, ஆடு வளர்க்கப்படும் பண்ணைகளை, கால்-நடை துறை இயக்குனர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தேசிய கால்நடை இயக்கத்தின் கீழ், ஆடு வளர்க்க மத்திய, மாநில அரசுகள் சார்பில், 50 சதவீத மான்யத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. அதில், கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே அத்திப்பாளையத்தில், ஒரு கோடி ரூபாய் மதிப்பில், பரிமளா என்-பவர் அமைத்துள்ள, ஆட்டு பண்ணையை, கால்நடை துறை இயக்குனர் மகேஸ்வரி ஆய்வு செய்தார்.
அப்போது, ஆடுகள் பராமரிக்கப்படும் விதம், ஓராண்டுக்கு ஈனும் ஆட்டுக்குட்டிகளின் எண்ணிக்கை, தீவனங்கள் வழங்கும் முறை, நோய் தடுப்பு சிகிச்சை ஆகிய விபரங்கள் குறித்து கேட்டறிந்தார். இணை இயக்குனர் சாந்தி, உதவி இயக்குநர்கள் உமா சங்கர், முர-ளிதரன், துணை இயக்குனர் பாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர்.