sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அரவக்குறிச்சி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள் ஆய்வு

/

அரவக்குறிச்சி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள் ஆய்வு

அரவக்குறிச்சி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள் ஆய்வு

அரவக்குறிச்சி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள் ஆய்வு


ADDED : செப் 14, 2025 04:57 AM

Google News

ADDED : செப் 14, 2025 04:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய பகுதியில், செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் தங்-கவேல் ஆய்வு செய்தார்.

அப்போது, அவர் கூறியதாவது: பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளுக்கு, முக்கியத்துவம் அளித்து பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை அரசு செயல்படுத்தி வருகிறது. அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த, 4 ஆண்டுகளில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்பு திட்டம், பள்ளிகள் உட்கட்டமைப்புத் திட்டம், கலைஞரின் கனவு இல்லம் உள்ளிட்ட பல்வேறு திட்-டங்கள் மூலம், 48.80 கோடி ரூபாய் மதிப்பில், 1,382 வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த வகையில் லிங்கம்நாயக்கன்பட்டி பஞ்.,ல், முதல்வர் கிராம சாலைகள் மேம்-பாட்டு திட்டத்தின் கீழ் 34.02 லட்சம் ரூபாய் மதிப்பில் நடந்து வரும் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணி, மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தின் கீழ், 36.50 லட்சம் மதிப்பில் நாற்-றாங்கால் அமைக்கும் பணி உள்பட வளர்ச்சி திட்டப்பணிகளை தரமாகவும், உரிய கால அளவிலும் முடித்து மக்கள் பயன்பாட்-டிற்கு கொண்டு வர, அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு கூறினார்.

ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்-குனர் வீரபத்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us