/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
இன்ஸ்டிடியூட் மாணவி மாயம்; போலீசில் புகார்
/
இன்ஸ்டிடியூட் மாணவி மாயம்; போலீசில் புகார்
ADDED : பிப் 11, 2025 07:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூரில், பாராமெடிக்கல் இன்ஸ்டிடியூட் மாணவியை, காண-வில்லை என, போலீசில் தாய் புகார்  செய்துள்ளார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை மனக்குன்றம் பகுதியை சேர்ந்த, பாலசுப்பிரமணி என்பவரது மகள் நிர்மலா தேவி, 19, மணப்பாறையில் தனியார் பாராமெடிக்கல் இன்ஸ்டிடியூட்டில் டி.எம்.எல்.டி.,
இரண்டாமாண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில், கரூர் காமராஜபுரத்தில் ஆய்வக பயிற்சிக்கு கடந்த, 8ல் வந்த நிர்மலா தேவியை
காணவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த, நிர்மலாதேவியின் தாய் அழகம்மாள், 39, போலீசில் புகார்
செய்தார். கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்-றனர்.

