ADDED : நவ 11, 2026 05:56 AM
அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பிரதம
மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம், மத்திய மற்றும் மாநில அரசின்
மானியத்துடன் செயல்படுத்தப்படுகிறது. எனவே, அரவக்குறிச்சி
சுற்று வட்டார பகுதி விவசாயிகள், நடப்பு சிறப்பு பருவத்தில் சாகுபடி
செய்துள்ள சம்பா நெல், மக்காச்சோளம் பயிருக்கு பயிர் காப்பீடு செய்திடலாம்.
இந்த
பயிர்களை பயிரிடும் விவசாயிகள் அனைவரும் (குத்தகை விவசாயிகள்
உட்பட) இத்திட்டத்தில் சேர தகுதியானவர்கள். பயிர் கடன் பெறும்
விவசாயிகள், அவர்களின் விருப்பத்தின் பேரில் கடிதம் கொடுத்து,
இத்திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம். பயிர் கடன் பெறாத விவசாயிகள்
தங்களது விருப்பத்தின் பேரில் இத்திட்டத்தில் சேரலாம்.
தேவைப்படும் ஆவணங்கள்
காப்பீடு
செய்ய தேவைப்படும் ஆவணங்களாக ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு எண்
மற்றும் ஐஎப்எஸ்சி தகவலுடன் கூடிய பாஸ் புத்தகத்தின் முதல் பக்க நகல்,
கிராம நிர்வாக அலுவலர் வழங்கிய நடப்பு பயிர் சாகுபடி அடங்கல்,
கம்ப்யூட்டர் சிட்டா நகல், காப்பீட்டு தொகை கடன் பெறும் விவசாயிகள்
மற்றும் கடன் பெறா விவசாயிகளுக்கு, ஒரே விதமான பயிர் காப்பீட்டு தொகை
மற்றும் பிரீமியம் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நெல்
பயிருக்கு காப்பீட்டு தொகை ஏக்கருக்கு ரூ. 39,300, பிரீமியம் தொகை
ஏக்கருக்கு ரூ.589.50. செலுத்த வேண்டிய கடைசி நாள் வரும், 15ம்
தேதியாகும். மக்காச்சோளம் பயிருக்கு காப்பீட்டு தொகை ஏக்கருக்கு
ரூ.33,300, பிரீமியம் தொகை ஏக்கருக்கு ரூ.499.50. செலுத்த வேண்டிய
கடைசி நாள் டிச., 2ம் தேதியாகும்.
உரிய காலக்கெடு
பதிவு
மேற்கொள்ளும் இடங்கள் மேலும் விரிவான விபரங்களுக்கு, அரவக்குறிச்சி
வேளாண்மை துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு, உரிய காலக்கெடுவிற்குள்
தங்கள் பகுதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்/தேசிய
மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்களில் பிரீமியம்
செலுத்தி பயிர் காப்பீடு செய்து பயனடையலாம்.
நெல் பயிருக்கு
அரவக்குறிச்சி பிர்கா மட்டும்; மக்காச்சோளம் பயிருக்கு
அரவக்குறிச்சி மற்றும் பள்ளப்பட்டி பிர்காவுக்கு உட்பட்ட
விவசாயிகள் பிரீமியம் தொகையை செலுத்தி பயனடையலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
