தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ க.பரமத்தி கடைவீதி சாலையில் லாரிகள் நிறுத்துவதால் அவதி

க.பரமத்தி கடைவீதி சாலையில் லாரிகள் நிறுத்துவதால் அவதி

க.பரமத்தி கடைவீதி சாலையில் லாரிகள் நிறுத்துவதால் அவதி


ADDED : நவ 11, 2026 05:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 11, 2026 05:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்:க.பரமத்தியில், கடை வீதியின் இருபுறமும் லாரிகள் நிறுத்தப்படுவதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

கரூரில் இருந்து கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், 18 கி.மீ., தொலைவில் க.பரமத்தி கடைவீதி அமைந்துள்ளது. இப்பகுதியை சுற்றியுள்ள மக்கள், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியர், அரசு, தனியார் துறை ஊழியர்கள் என ஆயிரக்கணக்கானோர் க.பரமத்தி கடைவீதி பஸ் நிறுத்தத்திற்கு வந்து பஸ்சிலும், இருசக்கர வாகனங்கள் மூலமாகவும், கரூர் சென்று பணி முடிந்து வீடு திரும்புகின்றனர்.

இப்பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

காலை, மாலையில் போக்குவரத்து நேரங்களில், காருடையாம்பாளையம் முதல் பரமத்தி கடைவீதி வரை உள்ள தனியார் உணவகங்கள் மற்றும் கடைகளின் முன்பாக தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும், ஏராளமான ஜல்லி லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.

உணவு அருந்துவதற்கும், ஓய்வெடுப்பதற்கும் என சாலையோரம் நிறுத்தப்படும் லாரிகளை, ஓட்டுனர்கள் மணிக்கணக்கில் எடுப்பதில்லை. சாலையை ஆக்கிரமித்து நீண்ட வரிசையில் லாரிகள் அணிவகுத்து நிற்பதால், நெடுஞ்சாலையின் அகலம் சுருங்கி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

லாரிகள் சாலையை மறைத்து நிற்பதால், இருசக்கர வாகன ஓட்டிகள், அடிக்கடி விபத்துகளில் சிக்குகின்றனர். இரவு நேரங்களில், போதிய வெளிச்சமின்மையால் நின்று கொண்டிருக்கும் லாரிகளின் பின்பகுதியில் இருசக்கர வாகனங்கள் மோதுகின்றன.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை விதிமீறி நிறுத்துவதால், தினசரி விபத்து பயத்துடனேயே பயணிக்க வேண்டியுள்ளது. எனவே, பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக லாரிகளை நிறுத்தும் டிரைவர்கள் மீது, போலீசார் அபராதம் விதித்து ஒழுங்குபடுத்த வேண்டும்,'

என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us