தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ தென்னையில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பயிற்சி முகாம்

தென்னையில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பயிற்சி முகாம்

தென்னையில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பயிற்சி முகாம்


ADDED : ஜூன் 07, 2026 05:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 07, 2026 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்:கார்வழியில், க.பரமத்தி வட்டார வேளாண்மை துறை சார்பில், அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தென்னையில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப மேலாண்மை பயிற்சி முகாம் நடந்தது.

க.பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொ) ஸ்ரீபிரியா பேசுகையில்,''ஒவ்வொரு விவசாயிக்கும் சிட்டா மற்றும் ஆதார் எண்ணுடன் இணைத்து அடையாள எண் உருவாக்கப்படும். இது இருந்தால் மட்டுமே, இனிவரும் காலங்களில் அரசு மானிய திட்டங்கள், பயிர் கடன்கள் மற்றும் பி.எம். கிஷான் நிதி போன்ற திட்டங்களில் விவசாயிகள் பயன்பெற முடியும்,'' என்றார்.

புழுதேரி வேளாண் அறிவியல் மைய வல்லுனர் கவியரசன், தென்னை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை, ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து விளக்கினார். பின், நடமாடும் மண் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் கலைச்செல்வன், தற்போது விவசாயிகள் மண்வளத்தை காத்திடவும் அதிகப்படியான உர பயன்பாட்டை தவிர்த்திடவும் கேட்டுக் கொண்டார். முகாமில் பங்கேற்ற விவசாயிகளுக்கு, விவசாய அடையாள எண் பதிவு செய்யும் பணி நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us