ADDED : ஜூன் 07, 2026 05:30 AM
அ நிறம் | அளவு
அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி பகுதிகளில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடுதல் நிகழ்ச்சி நடந்தது.
உலக
சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, தரு தன்னார்வ அறக்கட்டளை
சார்பில் வேலம்பாடி கிராத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. கடந்த, 10
ஆண்டுகளாக தேசிய தலைவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகள்
நடப்பட்டு, பராமரிக்கும் பணியை அறக்கட்டளையினர் செய்து
வருகின்றனர். அரவக்குறிச்சி சி.எஸ். அறக்கட்டளை சார்பில், தனியார்
அகாடமி பள்ளி மாணவர்கள் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு,
விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதாகைகள் ஏந்தி பிரசாரம்
செய்தனர். மேலும் அரவக்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட பூங்காவில்
மரக்கன்றுகள் நடப்பட்டன.
