/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் மிளகாய் சாகுபடி பணி தீவிரம்
/
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் மிளகாய் சாகுபடி பணி தீவிரம்
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் மிளகாய் சாகுபடி பணி தீவிரம்
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் மிளகாய் சாகுபடி பணி தீவிரம்
ADDED : பிப் 10, 2024 07:33 AM
கிருஷ்ணராயபுரம் : கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், மிளகாய் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேட்டுப்பட்டி, புனவாசிப்பட்டி, அந்தரப்பட்டி, பாப்பகாப்பட்டி, வரகூர், குழந்தைகப்பட்டி, சிவாயம், சரவணபுரம் ஆகிய பகுதியில் விவசாயிகள் விளை நிலங்களில் பரவலாக மிளகாய் சாகுபடி செய்து வருகின்றனர். கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது.
இதில் செடிகள் பசுமையாக வளர்ந்து காய்கள் பிடித்து வருகிறது. கடந்த ஆண்டு போல இந்த முறையும் மிளகாய் மகசூல் ஓரளவு இருக்கும். மேலும் மிளகாய் செடிகளில் இருந்து பழுத்து வரும் மிளகாய்களை, வரும் சில வாரங்களில் அறுவடை செய்யப்படும் என விவசாயிகள் தெரிவித்தனர்.