/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வேங்காம்பட்டி கிராமத்தில் கொசு ஒழிப்பு பணி தீவிரம்
/
வேங்காம்பட்டி கிராமத்தில் கொசு ஒழிப்பு பணி தீவிரம்
வேங்காம்பட்டி கிராமத்தில் கொசு ஒழிப்பு பணி தீவிரம்
வேங்காம்பட்டி கிராமத்தில் கொசு ஒழிப்பு பணி தீவிரம்
ADDED : ஆக 21, 2024 02:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்;கிருஷ்ணராயபுரம் அடுத்த கருப்பத்துார் பஞ்., வேங்காம்பட்டி கிராமத்தில், பொது சுகாதாரத்துறை சார்பில் கொசு ஒழிப்பு பணி நடந்தது. தற்போது, தொடர் மழை பெய்துவருவதால், கொசுக்கல் அதிகளவில் உற்பத்தியாகி, இரவில் மக்களை கடித்து வந்தது.
இதனால், பஞ்சாயத்து சார்பில், கொசு உற்பத்தியை தடுக்கும் விதமாக, குடியிருப்பு பகுதியில் தேங்கிய கழிவுநீர், குப்பையை அகற்றுதல், நல்ல குடிநீரை மூடி வைத்தல், குடிநீர் தொட்டி துாய்மை செய்தல் மற்றும் பிளீச்சிங் பவுடர் தெளிப்பு ஆகிய பணிகள் நடந்தன. இப்பணியில், மஸ்துார் பணியாளர்கள் ஈடுபட்டனர். சுகாதார ஆய்வாளர் பார்வையிட்டார்.