/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
காவிரி, அமராவதி ஆற்றுப்பகுதிகளில் சம்பா சாகுபடி பணி தீவிரம்
/
காவிரி, அமராவதி ஆற்றுப்பகுதிகளில் சம்பா சாகுபடி பணி தீவிரம்
காவிரி, அமராவதி ஆற்றுப்பகுதிகளில் சம்பா சாகுபடி பணி தீவிரம்
காவிரி, அமராவதி ஆற்றுப்பகுதிகளில் சம்பா சாகுபடி பணி தீவிரம்
ADDED : அக் 27, 2024 01:16 AM
காவிரி, அமராவதி ஆற்றுப்பகுதிகளில் சம்பா சாகுபடி பணி தீவிரம்
கரூர், அக். 27-
கரூர் மாவட்டத்தில், காவிரி, அமராவதி ஆற்றுப்பகுதிகளில் சம்பா சாகுபடி பணி விறுவிறுப்பாக துவங்கியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் பெரும்பான்மையான இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேட்டூர் அணை, அமராவதி அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதை தவிர நொய்யல் ஆறு தண்ணீரும் காவிரியாற்றில் கலக்கிறது. கரூர் மாவட்டத்தின், காவிரி பாசன பகுதிகளாக, கிருஷ்ணராயபுரம், குளித்தலை, அமராவதி பாசன பகுதிகள் க.பரமத்தி, அரவக்குறிச்சி, தான்தோன்றிமலை, கடவூர் பகுதிகளில் என மொத்தம், 37,065 ஏக்கரில் நெல் பயிரிட வேளாண்துறை திட்டமிட்டுள்ளது.
இதுவரை, 9,241 ஏக்கரில் நெல் சாகுபடி நடந்து வருகிறது. நடப்பு ஆண்டில் ஆற்று பாசனம் மட்டுமல்லது, கிணறு, போர்வெல் நம்பி நெல் சாகுபடி நடக்கிறது. சம்பா பருவத்துக்கு ஏற்ற, ஐ.ஆர்., 20, கோ50, சி.ஆர்., 1009, பி.பி.டி.,5204 உள்ளிட்ட நெல் ரகங்கள், 45 மெட்ரிக் டன் நெல் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்க, வேளாண் விரிவாக்க மையங்களில் தயார் நிலையில் உள்ளன. அனைத்து வகையான உரங்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, விவசாயிகள் சம்பா சாகுபடியை முழு வீச்சில் துவக்கியுள்ளனர். கரூர் அருகில் செட்டிபாளையம், சுக்காலியூர் உள்பட பல்வேறு பகுதிகளில் தழைச்சத்துக்காக கடந்த மாதம் அவுரி பயிரிடப்பட்டது. அதை நிலத்தில் அப்படியே டிராக்டர் மூலம், உழும் பணி மேற்கொண்டனர். தற்போது, பல பகுதிகளில், நெல் நாற்று விதைப்பு சுறுசுறுப்படைந்துள்ளது.
அமராவதி அணையின் நீர்மட்டம் திருப்திகரமாக இருப்பதாலும், வடகிழக்கு பருவ மழை எதிர்பார்த்தபடி துவங்கி உள்ள நம்பிக்கையில் நெல் சாகுபடி மட்டுமல்ல, மானாவரி நிலங்களிலும் தானியங்கள், காய்கறி சாகுபடியும் திருப்திகரமாக இருக்கும் என, விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.